வளர்ப்பு சரியில்லாததால் பெண் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை?

ஒரு குழந்தையின் ஆரோக்கியமான மனநலத்திற்கு சமூகம் மற்றும் குடும்பத்தினரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்த என்னுடைய அனுபவ பகிர்தல்.

அந்த பெண்ணிற்கு 17 வயது இருக்கும்பொழுதே  அவருடைய தந்தை இப்பெண்ணையும், அவருடைய தாயையும் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். அதிலிருந்து அப்பெண் ஒரு தீவிரமான மனஅழுத்தத்திற்க்கு செல்ல ஆரம்பித்தார். ஆனால்  அவருடைய தாய்க்கு இதைப்பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாததால் அவர் அதை ஒரு பொருட்டாகக்கருத்தவில்லை.

இது ஒரு பக்கம் இருந்த இப்பெண்ணுடன் சேரும் நண்பர்களும் தோழிகளும் போதை வஸ்த்திற்கு அடிமையானவர்களாதலால், இவரையும்  அதற்கு அடிமையாக்கினர். விளைவு:-அவர் கல்லுரிக்கு செல்ல  தவறினார்.  முழுவதுமாக  தன்னிலைய மறக்க தொடங்கினார். மேலும் அவர் உணவு, உறக்கம் எதுவுமின்றி, எந்தநேரமும் போதை   வஸ்த்தைப் பற்றிய சிந்தனையுடன் அனைவரையும் சந்தேத்திக ஆரம்பித்தார். தனக்கு தானே பேசவும், சிரிக்கவும், முனுமுனுக்கவும் ஈடுபடத்தொடங்கினர்.

இதையறிந்த அவருடைய கல்லூரிப் பேராசிரியை, இப்பெண்ணையும் அவருடைய தாயையும் சிகிச்சைக்கு என்னிடம் அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில் அவருக்கு அவருடைய நோய குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்த்தது. எனவே அவர் ஆலோசனை மற்றும் சிகிச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் தொடர் மனநல ஆலோசனைக்கு மற்றும் மருத்துவத்திற்க்கு பின் அவர் ஒத்துழைப்பு அளிக்க தொடங்கினார்.

அவர்க்கு தன் தந்தை மீது அதீத கோபமும், தாயின் மீது அதிருப்தியும் இருந்தது. அதனை ஆலோசனை மூலம் தெளிவுபடுத்தி, குடும்பத்தின் அரவணைப்பை அதிக படுத்தினோம். மேலும் அவர் போதை பழக்கத்தை கைவிட, அவருக்கு “Motivational Enhancement Behavioural Therapy” முறையில் அவர் போதைபழக்கத்தை விட சரியான காரணத்தையும், அவ்வெண்ணம் எழும் போது எவ்வாறு மனதை கட்டுபடுத்துவது போன்ற அலோசனையை வழங்கினேன்.

மேலும் மனஅழுத்தத்தை கையாளும் முறைகள் குறித்து அவருக்கு கவுன்சிலிங் அளித்தப்பின்னர் அப்பெண் கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சையில்  இருக்கிறார். முறையான மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையினால், இன்று வரை அப்பெண் போதை  வஸ்த்துக்களை மறந்து, மனநோயிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை அவரது தாயுடன் நிம்மதியாக வாழ்கிறார்.

மேலும் முறையான மருத்துவ சிகிச்சையினாலும், உளவியல் ஆலோசனையினாலும்  எப்பேர்பட்ட மன நோயையும் கையாள மற்றும் குணமடைய செய்ய முடியும் என்பது அனைவரும்  தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

-Tamilmani Balusamy

Psychiatric Social Worker

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *