கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று 75வது சுதந்திர தின விழா நவல்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. இதையடுத்து ஆத்மா மருத்துவமனை மற்றும் நேரு யுகேந்திரா குழுவும் இணைந்து “அச்சம் தவிர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நமது மருத்துவர் இராஜாராம் அவர்கள் பெண்கள் மனநலம் குறித்து சிறப்புரையும் அச்சம் தவிர் என்ற தலைப்பில் ஆத்மா சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் உரையாற்றி ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை பாரதியார் இளைஞர் நல சங்கம் ஒருங்கினைத்தனர் 100க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
