திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள C .S. I மேல்நிலை பள்ளியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ” மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தடுத்தல்” பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆல் தி சில்ரன் மண்டல அலுவலர் முருகையா தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மன நல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை ஆற்றினர் பள்ளி தலைமையாசிரியர் ஏசுராஜ் நன்றியுரை வழங்கினார் 160 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
