திருச்சி மாவட்டம் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து தற்கொலையை தடுப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் சிறப்புரையாற்றினார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார் இந்த நிகழ்வில் 210 மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் பற்றி தெரிந்து கொண்டனர்