(April -2) உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்தியாவில் 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆட்டிஸம் ஒரு நோயல்ல. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொற்றுநோயும் கிடையாது. ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை `ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’(Autism Spectrum Disorder) என்கிறோம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். பெரும்பாலானோருக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினாலும், தெளிவாக மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி பேசமாட்டார்கள். இந்த பேரணியை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr.கலையரசன் அவர்கள் துவைக்கி வைத்தார். இதில் 500 மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லுரியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆத்மா சிறப்பு பள்ளியின் முதல்வர் திருமதி. நான்சி அவர்கள் ஆட்டிசம் குறைபாடு பற்றிய தகவல்களை மாணவ மாணவிகளிடம் எடுத்து கூறினார். நிகழ்ச்சியை ஆத்மா மனநல மையம் மற்றும் சிந்துஜா மருத்துவமனை இணைந்து ஒருங்கிணைத்தனர் .
மூட நம்பிக்கைகளை புறம்தள்ளி சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒலி ஏற்றுவோம்
ஆத்மா சிறப்பு பள்ளி -𝟗𝟕 𝟖𝟖 𝟏𝟐 𝟐𝟐 𝟐𝟏