பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனையும் இணைந்து காவல்துறையினருக்கு பணி கால நேரத்தில் அல்லது ஏதேனும் சூழல்களில் ஏற்படும் மன அழுத்தங்கள், மனதில் ஏற்படும் எந்த வித கஷ்டங்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து கருத்தரங்கத்தை பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் நடத்தியது. இதில் முதலாம் நாள் நிகழ்ச்சியில் தந்தை ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர்.K.வரதராஜன், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் V.குணசீலன், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ச. மணி மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனையின் நிறுவனர் மனநல மருத்துவர் K.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொணடனர். இக்கருத்தரங்கில் ஆத்மாவின் மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் மனஅழுத்த மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.